Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை தட்டி சென்றார் ரகானே

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (11:28 IST)
சியேட் விருது பட்டியலில் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சியெட் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதில் 2014 ஆம் ஆண்டில் கலக்கிய வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த சர்வதேச வீரர் என்ற விருதை சங்ககரா தட்டி சென்றார். 
மேலும் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிக ரன்கள் குவித்தற்காக ரோகித் சர்மாவிற்கும் சிறப்பு விருது கிட்டியுள்ளது. மேலும் முன்னாள் வீரர் கபில் தேவ் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
 
மேலும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதை ஆம்லாவும், சிறந்த பந்துவீச்சுக்கான விருதை ரங்கனா ஹெராத்தும் தட்டி சென்றுள்ளனர். சிறந்த டி20 வீரராக பிராவோ தேர்வு செய்யப்பட்டார். மிகவும் பிரபலமான வீரர் என்ற விருதை போல்லார்ட் தட்டி சென்றார்.

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

Show comments