Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீர், கோலியை அழைத்து மன்னிப்புக் கேட்க வேண்டும்- பாக் வீரர் கருத்து!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:09 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் களத்துக்குள் மோதிக் கொள்வது இது முதல் முறை இல்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் அகமது ஷெஸாத் கோலியிடம் கம்பீர் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அதில் “வெளியில் இருந்து பார்க்கும்போது கம்பீர் மீதுதான் தவறு என்று எனக்கு தோன்றுகிறது. கம்பீர் பெருந்தன்மையானவர் என நினைத்தால் அவர் கோலியை அழைத்து மன்னிப்புக் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்த வரை எந்தவொரு அணியின் சப்போர்ட் ஊழியரும் வீரர்களிடம் சண்டைக்கு சென்றதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

ஒரு சீசனில் அதிக தோல்விகள்… சி எஸ் கே படைத்த மோசமான சாதனை!

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments