Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (11:24 IST)
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 வீக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் 2வது டி20 தொடர் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 8 வீக்கெட் இழப்பிறகு 134 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக தமிம் இக்பால் 43 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 4 வீக்கெட்டுகளையும், மொகமது நபி 2 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 வீக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக சாமிமுல்லா ஷேவாரி 49 ரன்களும், மொகமது நபி 31 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments