Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் பற்றி மோசமான கமெண்ட் அடித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்…!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (08:07 IST)
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளோடு வெளியேறியதை அடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் “பாகிஸ்தான் அணியின் நோக்கம் என்ன என்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் விளையாடும் போது எங்கள் கேப்டன் யுனீஸ் கான் மிகச்சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தார். அதனால் ஒரு வீரராக நானும் சிறப்பான உணர்வைக் கொண்டிருந்தேன். இப்போது வீரர்களை மெருகேற்றும் விதமான நோக்கம் இல்லை என நினைக்கிறேன். நீங்கள் ஐஸ்வர்யா ராயை கல்யாணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற நினைத்தால் அது நடக்காது” எனக் கூறினார்.

அவரின் இந்த மோசமான கமெண்ட்டுக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனங்களை சமூகவலைதளங்கள் மூலமாக பதிவு செய்ய இப்போது ரசாக் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள ரசாக் "நான் அப்துல் ரசாக். நேற்று, செய்தியாளர் சந்திப்பின் போது, ​​நாங்கள் கிரிக்கெட், பயிற்சி மற்றும் நோக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நான் நிலைமையை விளக்குவதற்கு ஒரு உதாரணம் சொல்லும் போது நடந்த ஒரு சறுக்கல் இது.

நான் வேறு சில உதாரணங்களைச் சொல்ல விரும்பினேன் ஆனால் தற்செயலாக ஐஸ்வர்யாவின் பெயர் வந்தது. என் தவறுக்கு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அது என் நோக்கமல்ல. நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை… ரசிகர்களின் ஆதங்கக் குரல்!

தொடர் தோல்விகள்… மோசமான சாதனையை தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!

இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments