Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த டி வில்லியர்ஸ் - சதத்தில் சாதனை ((வீடியோ))

வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த டி வில்லியர்ஸ் - சதத்தில் சாதனை ((வீடியோ))
, திங்கள், 19 ஜனவரி 2015 (12:57 IST)
தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்தது உட்பட பல சாதனைகளை படைத்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்திருந்தது.
 

 
2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 439 ரன்களை குவித்தது.
 
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 291 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 148 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
நேற்றைய இந்தப் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
 
சாதனைகள் விவரம் பின்வருமாறு:
 
டி வில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் சதம் கண்டவர் என்ற கோரி ஆண்டர்சனின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் கண்டதே அதிவேக சதமாக இருந்தது.
 
webdunia

 
இது தவிர குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் டி வில்லியர்ஸ் தகர்த்தெறிந்தார். அவர் 16 பந்துகளில் இந்த இலக்கை எட்டினார். இலங்கை வீரர் ஜெயசூர்யா 17 பந்துகளில் அரைச்சதம் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இந்தப் போட்டியில் டி வில்லியர்ஸ் 16 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். இதற்கு முன்னர் இந்திய அணியின் ரோஹித் சர்மா 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அந்த சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். டி வில்லியர்ஸ் மொத்தம் 44 பந்துகளில் 149 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆட்டத்தில் டி வில்லியர்ஸின் ரன்ரேட் விகிதம் 339 ஆகும். இதன் மூலம் 100 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் அதிக ரன்ரேட் விகிதத்துடன் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
webdunia

டி வில்லியர்ஸ் மற்றும் ஆம்லா
 
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஆம்லாவும், ரிலீ ரோஸவ்வும் இணைந்து 247 ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.
 
இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டனும், கிப்சும் 235 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil