Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

T20 உலக கோப்பை: இந்தியா - இலங்கை இன்று மோதல்

T20 உலக கோப்பை: இந்தியா - இலங்கை இன்று மோதல்
, திங்கள், 17 மார்ச் 2014 (13:26 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.
FILE

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தகுதி சுற்று போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் முன்னணி அணிகளுக்கு பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி மிர்புரில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கையை சந்திக்கிறது.

20 ஓவர் உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராவதற்கும், இங்குள்ள சூழலை அறிந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும்.

பயிற்சி ஆட்டத்தில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து, அதில் அவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை கண்டறிய இந்திய கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் நமது வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். மறுபடியும் அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங்கும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றிய பலம் வாய்ந்த இலங்கையை வீழ்த்தினால், அடுத்து வரும் போட்டிகளை இந்திய அணியால் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மொகித் ஷர்மா, வருண் ஆரோன்.

முன்னதாக நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இதே மைதானத்தில் மாலை 3 மணிக்கு சந்திக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil