Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டெஸ்ட்- இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (14:22 IST)
5வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மட்டும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
 
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற  4 ஆட்டங்கள் நிறை பெற்ற நிலையில், இந்திய அணி  3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
 
இதைத்தொடர்ந்து, இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி  மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கியது.
 
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட  நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான 5 வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

 
259 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2 வது இன்னிங்ஸிக்ல் 195 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி.
 
எனவே இன்னிங்ஸ் மட்டும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
இந்த நிலையில், தொடர் வெற்றியாலும் 4 வது டெஸ்ட் வெற்றியாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.  இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் அஸ்திரேலியாவின் முதலிடம் கனவு தகர்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments