Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்டிற்கு சர்வாண் நீக்கம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2011 (12:08 IST)
6 ஆம் தேதி துவங்கும் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் அணியிலிருந்து மேற்கிந்திய வீரர் ராம் நரேஷ் சர்வாண் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக துவக்க வீரராக ஆடி வரும் கிரன் போவெல் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டொமினிகாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயது இடது கை பேட்ஸ்மென் கிரன் போவெல் தவிர அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இவர் ஏற்கனவே வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்.

பலமான இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக போவெல் ஒரு சதத்தை மேற்கிந்திய ஏ அணிக்காகப் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments