Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரிட்சை

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2015 (11:55 IST)
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 3 ஒரு நாள் போட்டி, 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவைகள் அடங்கும். மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இத்தொடருக்கு இளம் வீரர் ரகானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஒருவழியாக இந்திய அணி போராடி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்நிலையில் இருஅணிகள் மோதும் 2 ஆவது ஒரு நாள் போட்டி  இன்று நடக்கவுள்ளது. கடந்த முறை சொதப்பியது போல் இல்லாமல் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே தொடரை வெல்ல முடியும்.
 
தமிழக வீரர் முரளி விஜய், உத்தப்பா, திவாரி, ஹர்பஜன்சிங் ஆகிய வீரர்கள் துடிப்புடன் செயல்பட வேண்டும். ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்புரா ஃபார்ம் அற்புதமாக உள்ளது. இவர் களத்தில் நின்றுவிட்டால் எதிரணிக்கு சிக்கல்தான். எனினும் ஜிம்பாப்வே வீரர்கள் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments