Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசம் வெற்றி

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (16:35 IST)
டாக்காவில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியது.

ரசாக்கின் ஹேட்ரிக் ஷாகிபின் 4 விக்கெட்டுகளுடன் 191 ரன்களுக்கு ஜிம்பாப்வேயைச் சுருட்டிய வங்கதேசம் பிறகு 39.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தமீம் இக்பால் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுக்க ஜுனைத் சித்திக் 53 ரன்களையும் ராகிபுல் ஹஸன் 65 ரன்களையும் எடுத்து வெற்றியைச் சாதித்தனர்.

ஜிம்பாப்வே அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரே பிரைஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகனாக ஹேட்ரிக் சாதனையாளர் அப்துர் ரசாக் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments