Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15,000 ரன்கள்; 2011 உலகக் கோப்பை வெற்றி - சச்சின் டெண்டுல்கர் இலக்கு

15,000 ரன்கள்; 2011 உலகக் கோப்பை வெற்றி - சச்சின் டெண்டுல்கர் இலக்கு
, வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (11:09 IST)
தனது சாதனைகள் திருப்தி தருவுதாயில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள் எடுப்பதும்,, அனைத்திற்கும் மேலாக உலகக் கோப்பையை வெல்வதும் தனது எதிர்கால இலக்கு என்றும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட்டர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இது வரை சாதித்தது திருப்தி அளிக்கவில்லை, நான் 15,000 ரன்களை எடுப்பது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் என்னிடம் கூறியுள்ளார், அவ்வாறு நான் செய்யவில்லை எனில் என் மீது அவர் கோபம் கொள்வார் என்று அவர் ஏற்கனவே ஒரு முறை கூறியிருக்கிறார்" என்று கூறியுள்ளார் சச்சின்.

தனது மற்றொரு மிகப்பெரிய லட்சியம் 2011 உலகக் கோப்பை சாம்பியனாக இந்திய கிரிக்கெட் அணி விளங்கவேண்டும் என்பதே என்று கூறியுள்ளார் சச்சின்.

மேலும் தான் எப்போதும் ஏதாவது ஒரு வலியுடந்தான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்று கூறிய டெண்டுல்கர் கடைசி 3 மாதங்களாக கைவிரல் காய வலியுடன் விளையாடி வருவதாக கூறினார். 25 வயதில் என்ன செய்தேனோ அதனை இன்றும் செய்ய முடியும், ஆனால் உடல் மாறிக் கொண்டிருக்கிறது, அதனால் சிந்தனையையும் மாற்றவேண்டியுள்ளது. நான் எப்படி யோசிக்கிறென் என்பதையே தற்போது மாற்ற வேண்டியுள்ளது. அதாவது 'ரிஸ்க்' குறைவாக எடுக்கவேண்டும்.

ஆஸ்Tரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கானன், சச்சின் டெண்டுல்கர் இன்னிங்ஸ் துவக்கத்தில் ஷாட் பிட்ச் பந்துகளுக்கு வீழ்ந்து விடக்கூடியவர் என்று கூறியுள்ளது குறித்து சச்சினிடம் கேட்டதற்கு "அது அவரது கருத்து, ஜான் புக்கானன் எப்போதும் எல்லாவற்றையும் சரியாக கூறவேண்டும் என்ற அவசியமில்லை. ஷாட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ளவில்லை எனில் நான் எவ்வாறு இன்னமும் ரன்களை என்னால் குவித்துக் கொண்டிருக்க முடியாது.

அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், உலகத்தில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களிடம் ஏதோ ஒரு தவறு உள்ளது, இதனால்தான் என்னை இவ்வளவு ரன்களை அடிக்க விட்டுள்ளனர்".

டான் பிராட்மேன், ஒரு முறை சச்சினின் ஆட்டம் தன் ஆட்டம் போல் இருப்பதாகக் கூறிய புகழ் பெற்ற அறிக்கைக்குப் பின்னர், சச்சின் தற்போது விரேந்திர சேவாக் கிட்டத்தட்ட தன் பாணியில் ஆடி வருவதாக தெரிவித்தார் சச்சின்.

அதே போல் ஓய்வு பெறுவது குறித்து பேசியுள்ள சச்சின், தன்னை வெளியே இழுக்கவேண்டிய அவசியமில்லை. எப்போது எனக்க்கு சரியான நேரம் என்று தோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ள சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகான ஒரு வாழ்க்கையை நினைத்தாலே தனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது என்றும், தனது வாழ்க்கை முழுதும் கிரிக்கெட்டுடனேயே இருந்து வந்துள்ளதால் ஓய்வு பெற்ற் பிறகும் இன்னொரு 10 பந்துகள் விளையாடவேண்டும் என்ற ஆவல் தீரவே தீராது என்றும் கூறியுள்ளார் சச்சின்.

Share this Story:

Follow Webdunia tamil