Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலந்து 11 ஓவர்களில் 57/1

ஹாலந்து 11 ஓவர்களில் 57/1
, செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (15:19 IST)
நாக்பூரில் நடைபெற்று வரும் இன்றைய உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்து வரும் ஹாலந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. பரேசி 29 ரன்களுடனும், டாம் கூப்பர் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

துவக்க வீரர் கெர்வீஸ் 16 ரன்கள் எடுத்து பிரெஸ்னன் பந்தில் பிரையரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கெவீசும் பரேசியும் இணைந்து 6 ஓவர்களில் துவக்க விக்கெட்டுக்காக 36 ரன்களைச் சேர்த்தனர்.

6 பவுண்டரிகளை அடித்துள்ள விக்கெட் கீப்பரும் துவக்க வீரருமான பரேஸி ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அபாரமாக அடித்தார்.

சற்று முன் பிரெஸ்னன் வீசிய பவுன்சரை அபாரமாக புல் செய்து ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்தார் கூப்பர்

ஹாலந்து சிறப்பாகவே துவங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil