Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லார்ட்ஸில் பயிற்சி செய்யவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்

லார்ட்ஸில் பயிற்சி செய்யவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்
, திங்கள், 4 ஜூலை 2011 (15:19 IST)
இங்கிலாந்துக்கு எதிரான அதிமுக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தயாரிப்பாக இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது வர்த்தக மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக லண்டன் சென்றுள்ள சச்சின் அங்கு தனது மகன் அர்ஜுனுக்கு எம்.சி.சி. அகாடமியில் பயிற்சி அளிப்பதாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தில் தன்னுடன் தனது கிர்க்கெட் கிட் பேகையும் சச்சின் டெண்டுல்கர் கொண்டு சென்றுள்ளார்.

ஜூலை 21ஆம் தேதி லார்ட்ஸில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. லார்ட்ஸில் சச்சின் தனது 100வது சர்வதேச சதத்தை எடுக்க இப்போது முதலே சீரிய பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil