Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!
, செவ்வாய், 11 மார்ச் 2014 (10:22 IST)
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
FILE

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டுடன் எல்லா வகையான ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கும் 7-வது ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயதான ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2008-ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சனின் பங்களிப்பு சிறப்பானதாகும். அந்த போட்டியில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார்.
webdunia
FILE

முதல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் ஷேன்வாட்சன் இதுவரை 61 ஆட்டத்தில் விளையாடி 1,887 ரன்கள் எடுத்து இருப்பதுடன் 54 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஷேன் வாட்சன் கருத்து தெரிவிக்கையில், 'ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பதை கவுரவமாக கருதுகிறேன். அசாதாரணமான அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் எப்பொழுதும் எனக்கு அரிய வாய்ப்புகளை அளித்து வருகிறது. சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து அளிப்பதுடன், வெற்றி உத்வேகத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

2008-ம் ஆண்டில் வென்றதை போல் மீண்டும் நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் கடந்த ஆண்டு இறுதிபோட்டி வரை வந்தோம். இந்த ஆண்டு கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். அணி நிர்வாகத்தினர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன்’ என்றார்.
webdunia
FILE

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கும் டிராவிட் கூறுகையில், 'புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷேன்வாட்சன், உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் மட்டுமன்றி, திறமையான தலைமை பண்பும் கொண்டவர். முதல் போட்டி முதல் அணியினருடன் இருந்து வரும் வாட்சனுக்கு எல்லா வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றி நன்கு தெரியும். வாட்சனின் தலைமையில் ராஜஸ்தான் அணி நல்ல உத்வேகத்துடன் செயல்படும்' என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil