Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கிந்தியத் தீவுகள் 124/4 (28)

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2011 (16:42 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்து 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தவுடன், டேரன் பிராவோ அபாரமான முறையில் ஆடி அசத்தினார். ஆனால் அவர் 82 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் சகிதம் 73 ரன்கள் எடுத்து போத்தாவின் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.டபிள்யூ. ஆனார்.

நடுவர் கொடுத்த அவ்ட்டை அவர் மறுபரிசீலனை செய்தார் ஆனால் அது அவுட் என்று தீர்மானிக்கப்பட்டது.

இவரும் டெவன் ஸ்மித்தும் இணைந்து 111 ரன்களைச் சேர்த்து பலம் சேர்த்தனர். ஆனால் அதன் பிறகு டேரன் பிராவோ ஆட்டமிழந்தவுடன் 36 ரன்கள் எடுத்த ஸ்மித், புதிய லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹீர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சற்று முன் ராம்னரேஷ் சர்வாண் 10 பந்துகள் தடுமாறி 2 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹீர் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார் இவரும் 3-வது நடுவரை அணுகி மேற்கிந்திய அணிக்கு இருந்த 2 மேல்முறையீடு வாய்ப்பையும் பறிகொடுக்கச் செய்தார்.

தற்போது சந்தர்பால் 5 ரன்களுடனும், டிவைன் பிராவோ 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் போத்த்தா 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

7 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்திய அணி.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments