Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை கிரிக்கெட் சங்கத்தில் கவாஸ்கர்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (15:13 IST)
சுமார் 10 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு சுனில் கவாஸ்கர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். அவர் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக் குழுவை தேர்வு செய்வது, பயிற்சியாளர்களை நியமிப்பது, உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் நடவடிக்கைகளும் இனிமேல் கவாஸ்கரின் முடிவின் படியே மும்பை கிரிக்கெட் சங்கத்தில் நடைபெறும்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பை கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஒரே ஒரு முறைதான் ஈடுபட்டுள்ளார். அதாவது 1998ஆம் ஆண்டு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராமாகந்த் தேசாய் விலகியபோது கவாஸ்கர் துணைத் தலைவர் பொறுப்பில் சிறிது காலம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களாக முன்னாள் மும்பை ரஞ்சி அணித் தலைவர் மிலிந்த் ரெகே, பல்வீந்தர் சிங் சாந்து, சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments