Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டெஸ்ட்: இஷாந்த் ஷர்மா சந்தேகம்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2011 (13:19 IST)
கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷனத்த் ஷர்மா ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் இஷாந்த்சர்மா. 23 வயதான அவர் ஆஸ்திரேலிய லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 5.3 ஓவர் வீசி இருந்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் தான் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த காயத்தால் இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 26-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் ஆடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அணி நிர்வாகம் இன்னும் 24 மணி நேரத்தில் முடிவு செய்யும் இஷாந்த் சர்மா 41 டெஸ்டில் விளையாடிய அனுபவம் பெற்றவர். ஜாகீர்கானுக்கு அடுத்தப்படியாக அணியில் அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றவர்.

வெஸ்ட்இண்டீஸ் தொடரில் தொடர்ந்து தனது பந்து வீச்சில் முத்திரை பதித்தார். ஜாகீர்கான் நீண்ட இடைவேளைக்கு பிறகு காயத்தில் இருந்து அணிக்கு திரும்பியுள்ள நிலையில் இஷாந்த் சர்மா காயம் அடைந்தது பின்னடைவாகும்.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வீரர்கள் காயம் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments