Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சூப்பர் ஓவர்; மீண்டும் நியூசீ. தோல்வி; வெளியேறியது

மீண்டும் சூப்பர் ஓவர்; மீண்டும் நியூசீ. தோல்வி; வெளியேறியது
, திங்கள், 1 அக்டோபர் 2012 (20:01 IST)
FILE
பல்லகிலேயில் நடைபெற்ற நியூசீலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றது அதில் மேற்கிந்திய அணியின் சாம்யேல்ஸ் சவுதீ பந்தை சிக்சருக்குத் தூக்க 18 ரன்கள் எடுத்து மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. நியூசீலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இரு அணிகளும் 139 ரன்கள் எடுத்து சமன் செய்ய ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் நியூசீலாந்து முதலில் பேட் செய்தது. ராஸ் டெய்லரும், மெக்கல்லமும் களமிறங்கினர்.

மேற்கிந்திய அணியில் மர்லான் சாமுயேல்ஸ் பந்து வீச வந்தார். முதல் பந்து வைடு வீசினார். இரண்டாவது பந்தை ஸ்கூப் செய்து 2 ரன்கள் எடுத்தார் டெய்லர். 3வது பந்தில் லெக் பை ஒரு ரன். மெக்கல்லம் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். யார்க்கர் ஒரு ரந்தான் கிடைத்தது. 4வது பந்து டெய்லர் மீண்டும் ஸ்கூப் ஆட பைன்லெக்கில் பவுண்டரி. அடுத்த பந்து புல்டாஸாக அமைய டெய்லர் அதனை மிகப்பெரிய சிக்சருக்கு மிட்விக்கெட்டில் தூக்கினார்.

கடைசி பந்து 2 ரனகள் மொத்தம் 17 ரன்கள். மேற்கிந்திய அணிக்கு சூப்பர் ஓவர் இலக்கு 18 ரன்கள்.

மீண்டும் சவுதீ பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ் கெய்லும், சாமுயேல்ஸும் களமிறங்கினர்.

webdunia
FILE
முதல் பந்து நல்ல லெந்த் பந்து ஆனால் கெய்ல் அதனை முன்னால் காலை போட்டு லாங் ஆஃப் திசையில் சிக்சர் ஆக்கினார். அது நோபாலாகவும் அமைய பிரீ ஹிட் கிடைத்தது. ஆனால் பிரீ ஹீட்டில் ஒரு ரந்தான் எடுக்க முடிந்தது. ஆனால் ஒரு பந்தில் மேற்கிந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தும் லோ புல்டாஸ், அதனை 2 ரன்கள் எடுத்தார் சாமுயேல்ஸ். அடுத்த பந்து ஒரு ரன் எடுத்தார் சாமுயேல்ஸ். அடுத்த பந்து கெய்லைப் பார்த்து பயந்து சவுதீ வைடு வீச ஒரு ரன் ஆனது. அடுத்த பந்தை கெய்ல் ஒரு ரன் எடுத்தார். 5வது பந்து வந்தது. புல்டாஸ் சாமுயேல்ஸ் தூக்கி மிட்விக்கெட்டில் அடிக்க அதனை கேட்ச் பிடிக்க கப்தில் அசகாய சூர முயற்சி செய்தார் ஆனால் பந்து சிக்சர ஆனது. மேற்கிந்திய அணி வெற்றி பெற்று நியூசீ.யை வெளியேற்றியது.

முன்னதாக முழு நேர ஆட்டத்தில் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் யார் போடுவது என்று குழப்பமான நிலையில் மர்லான் சாமுயேல்ஸிடம் பந்து கொடுக்கப்பட்டது.

அவர் முதல் பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்து அபார யார்க்கர் ரன் இல்லை. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் வந்தது அதாவது 4 ரன்கள் வந்தது. அடுத்த பந்தை சாமுயேல்ஸ் புல்டாஸாக வீச டெய்லர் அபாரமாக அதனை தூக்கி சிக்சருக்கு அனுப்பினார்.

2 பந்துகளில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை டெய்லர் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்து 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பிரேஸ்வெல் அதனை ச்கோயர் லெக் திசையில் தட்டி விட்டு 2வது ரன்னுக்கு ஓடினார் ஆனால் அங்கு ரவி ராம்பாலுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த டிவைன் ஸ்மித் நேராக எடுத்து ஸ்டம்பில் அடித்தார் அபாரமான த்ரோ. பிரேஸ்வெல் நடு வழியில் இருந்தார் அவுட். இதனால் ஸ்கோர் 139 என்று டை ஆனது.

இதற்கு முன்பு 140 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய நியூசீலாந்து முதலில் நிகோலை ரவி ராம்பாலிடம் இழந்தது. ஆனால் அதன் பிறகு மெக்கல்லமும் கப்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். கப்தில் 2 பவுண்டரிகளையும், மெக்கல்லம் 3 பவுண்டரிகளையும் அடித்தனர். ஸ்கோர் 7.2 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்கல்லம் பத்ரீ பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். உடனடியாக கப்தில் சாமி வீசிய ஒரு மோசமான பந்தை நேராக பாயிண்ட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

9 ஓவர்களில் நியூசீலாந்து 52/3 என்று இருந்தது. டெய்லரும், பிராங்கிளினும் களத்தில் இருந்தனர். பிராங்கிளின் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்கோர் 13வது ஓவர் முடிவில் 85 ரன்களகா இருந்தபோது பிராங்கிளின் சுனில் நரைன் வீசிய அபாரமான பந்தை எட்ஜ் செய்ய, அது நேராக ஸ்லிப்பில் கெய்லிடம் சென்றது கெய்ல் அதனை அபாரமாக வலது புறம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

இங்குதான் ஆரம்பித்தது திருப்பு முனை. சுனில் நரைன் அதன் பிறகு அபாரமான தூஸ்ராவை வீசி ஜேக ஓரமை கட்டுப்படுத்தினார். ஓரம் 6 ரன்கள் எடுத்திருந்தபோது சுனில் நரைனின் அருமையான தூஸ்ராவிற்கு நேராக எல்.பி. ஆனார். அதன் பிறகு நேதன் மெக்கல்லமிற்கு சுனில் நரைன் புரியாத பந்துகளை வீச ரன் விகிதம் வெகுவாக கட்டுப்ப்பாட்டிற்குள் வந்தது.

19வது ஓவரை வீசிய சுனில் நரைன் மெக்கல்லம்மை வீழ்த்தியதோடு வெறும் 2 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சுனில். நடுவில் கிறிஸ் கெய்ல் ஒரு ஓவரை வீச அந்த ஓவரில் 15 ரன்களை விளாசினார் ராஸ் டெய்லர். இதனால் ஆட்டம் நியூசீ. பக்கம் சென்றது.

ஆனால் சுனில் நரைனின் 3 விக்கெட்டுகள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் பக்கம் திருப்பியது. டெய்லர் அற்புதமாக விளையாடி 40 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஆனால் பயனில்லை அவரது ஆட்டம் வீணானது.

நியூசீலாந்து 139/7 என்று ஆட்டம் டை ஆகி பிறகு சூப்பர் ஓவரில் 17 ரன்களை அடித்தும் அதனை வெற்றியாக மாற்ற முடியாமல் மீண்டும் சவுதீ தொடை நடுங்கியபடியே பந்து வீசி நியூசீலாந்தை தோற்கச்செய்தார். நேதன் மெக்கல்லத்திடம் கொடுக்க முயன்றார் ராஸ் டெய்லர் ஆனால் திடீரென சவுதீ வீச வந்தார். ஒரு வேளை நேதன் வீசியைருந்தால் ஆட்டம் நியூசீ.க்கு சாதகமாகக் கூட முடிந்திருக்கலாம். ஆனால் கிறிஸ் கெய்ல், சாமுயெல்ஸ் அல்லவா ஆட வந்தனர். ஒன்றும் சொல்வத்ற்கில்லை.

இப்போது அடுத்த ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை வீழ்த்தினால் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அரையிறுதிக்குள் நுழைவர். இல்லை, இங்கிலாந்து வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்க்கு இடையே ரன் விகித அடிப்படையில் அரையிறுதி இடம் தீர்மானிக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil