Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே வாரியர்ஸ் 143/7 (20ஓவர்)

Webdunia
ஞாயிறு, 1 மே 2011 (17:50 IST)
ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புனே வாரியர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற ஷேன் வார்ன் முதலில் புனே வாரியர்ஸை பேட் செய்ய அழைத்தார். ரைடர் தேவையில்லாமல் முதலில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மணீஷ் பாண்டே நிதானம் காட்ட, உத்தப்பா வழக்கம் போல் ஆக்ரோஷம் காட்டி 21 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் இவர் அதிர்ஷ்டம் இன்று இவரை ஷேன் வார்னிடமிருந்து 3 முறைக் காப்பாற்றியது. 3 முறையும் பிளம் எல்.பி. ஆனார். ஆனால் நடுவர் தாராபூர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

ஆனால் கடைச்யில் ஷேன் வார்ன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும் போது 70/2 என்று இருந்தது புனே வாரியர்ஸ். ஓவர்கள் 8.2. ஆனால் அதன் பிறகு யுவ்ராஜ் சிங் 7 ரன் எடுத்த நிலையில் மணீஷ் பாண்டே நேராக ஒரு ஷாட் அடிக்க அது பந்து வீச்சாளர் கையில் பட்டு ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனார். அவர் 7 ரன்களில் அவுட்.

அதன் பிறகு ரன்கள் குவிக்க திணறவேண்டியிருந்தது. பாண்டே 30 ரன்கள் எடுத்து விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்.

மன் ஹாஸ் 24 ரன்களையும் நேதன் மெக்கல்லம் 11 ரன்களையும் எடுத்து ஓரளவுக்கு நல்ல ரன்களை எட்டியது புனே வாரியர்ஸ். 143 ரன்களை எடுத்துள்ளது புனே வாரியர்ஸ்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments