Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனேவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுமாரான வெற்றி

புனேவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுமாரான வெற்றி
, வெள்ளி, 3 மே 2013 (10:32 IST)
FILE
ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை 17 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்தது.

புனே, சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட் செய்தது. திவாரி, கிறிஸ் கேல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கேல் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். திவாரி அரை சதம் அடித்து அசத்தினார். கோஹ்லி 25 ரன், திவாரி 52 ரன் எடுத்து டிண்டா வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

டிண்டா வீசிய கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் 26 ரன் விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெடுக்கு 187 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 50 ரன், ஹென்ரிக்ஸ் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதையடுத்து, 17 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. புனே தரப்பில் உத்தப்பா 75 ரன் எடுத்தார்.

இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil