Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய அணிகளுக்கும் டெஸ்ட் தகுதி தரும் ஐசிசி-யின் புதிய திட்டம்!

புதிய அணிகளுக்கும் டெஸ்ட் தகுதி தரும் ஐசிசி-யின் புதிய திட்டம்!
, வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (11:35 IST)
அயர்லாந்து, ஆப்கான், ஸ்காட்லாந்து, யு.ஏ.இ. நெதர்லாந்து என்று நிறைய அணிகள் ஐசிசி இன்டர் காண்டினெண்டல் கோப்பை என்ற தொடரில் விளையாடி வருவது நாம் அறிந்ததே.
 
இந்த நிலையில் இந்த கோப்பையை வெல்லும் சாதாரண அணி, ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் கடைசியாக உள்ள அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் தங்கள் சொந்த நாட்டிலும் மேலும் 2 டெஸ்ட் போட்டிகளை எதிரணியினரின் நாட்டிலும் விளையாடும். இதற்கு ஐசிசி டெஸ்ட் சாலஞ்ச் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இதுபோன்ற முதல் டெஸ்ட் 2018ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்டர் காண்டினென்டல் கோப்பை கிரிக்கெட் 2 ஆண்டுகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அசோசியேட் அணி, டிசம்பர் 31, 2017-இல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 10ஆம் நிலையில் உள்ள அணியுடன் தன் சொந்த நாட்டிலும், அவர்களது நாட்டிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப்பெறும்.
 
இந்த இன்டர் காண்டினென்டல் கோப்பை 2004ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அயர்லாந்து அணி இதில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது. எனவே டெஸ்ட் அந்தஸ்து பெறும் அணி அயர்லாந்தாகவே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில முடிவுகள் வருமாறு:

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போது வங்கதேசத்தில் முடிந்த உலகக் கோப்பை வடிவத்திலேயே நடைபெறும்.
 
ஏப்ரல் 30, 2014-இல் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் 2016 T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு தானாகவே தகுதிபெறும். அசோசியேட் அணிகளுக்கு இப்போது போலவே தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெறும்.
 
தகுதிச் சுற்றுப்போட்டிகள் 2015 ஜூலை 9ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil