Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிங், கிளார்க் அவுட்; ஆஸ்ட்ரேலியா 190/3

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (15:04 IST)
மொஹாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேல்யா சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

வாட்சன் 78 ரன்களுடனும் ஹஸ்ஸி 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக வாட்சனும், பாண்டிங்கும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 141 ரன்களைச் சேர்த்தனர்.

இதில் பாண்டிங் 71 ரன்கள் எடுத்து ரெய்னாவின் அபாரமான த்ரோவிற்கு ரன் - அவுட் ஆனார்.

மைக்கேல் கிளார்க் ஒரேயொரு அபாரமான பவுண்டரி அடித்து 39 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜனின் பந்தை கட் செய்ய முயன்று திராவிடிடம் கேட்ச் கொடுத்தார்.

வாட்சனுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கபட்டதை நன்றாகப் பயன்படுத்தி நன்றாக விளையாடி வருகிறார். இஷாந்த் ஷர்மா காயமடைந்து வெளியேறியதாகத் தெரிகிறது.

ஓஜா 22 ஓவர்கள் வீசி 29 ரன்களையே கொடுத்துள்ளார்.

ஹர்பஜன் 60 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்துள்ளார். சேவாக் 2 ஓவர்கள் வீசினார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments