Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு 510 ரன்கள் வெற்றி இலக்கு! ‌திணறு‌கிறது!

பாகிஸ்தானுக்கு 510 ரன்கள் வெற்றி இலக்கு! ‌திணறு‌கிறது!
, ஞாயிறு, 24 ஜூன் 2012 (17:49 IST)
காலேயில் இலங்கை-பாகிஸ்தா‌ன் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 510 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 472 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்குச் சுருண்டது.

ஃபாலோ ஆன் கொடுக்காமல் களமிறங்கிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்து பாகிஸ்தான் அணிக்கு 510 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

3வது நாளான இன்று தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி ஆ‌ட்ட நேர இறு‌தி‌யி‌ல் 15 ஓவர்களில் ‌3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil