Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி
, வெள்ளி, 18 மார்ச் 2011 (10:50 IST)
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் மேற்கிந்திய அணி விக்கெட்டுகள் சரிய அந்த அணி தோல்வியைத் தழுவியது.

244 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்லும், டேவோன் சஸ்மித்தும் விளையாடினர். கெய்ல், தொடக்கத்திலேயே தனது தாக்குதலை தொடுத்தார். பிரிஸ்னன் ஓவரில் 4 பவுண்டரி, டிரெம்லெட் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று பின்னியெடுத்தார். 5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 50 ரன்களை கடந்தது. எந்த ஒரு இங்கிலாந்து பந்து வீச்சாளருக்கும் மரிட்யாதை இல்லை.

கெய்ல் 43 ரன்களில் (21 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரெட்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதன் பின்னரும் வெஸ்ட் இண்டீசின் ரன்விகிதம் கணிசமாக எகிறிது. இருப்பினும் மறுமுனையில் விக்கெட்டுகளும் அதே வேகத்தில் சரிந்தன.

முன்னணி வீரர்கள் டேரன் பிராவோ 5 ரன்களிலும், கேப்டன் சேமி 41 ரன்களிலும் (29 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அதிரடிநாயகன் பொல்லார்ட் 24 ரன்களிலும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். 150 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (27.4 ஓவர்) இழந்ததால் இங்கிலாந்தின் கை லேசாக ஓங்கியது.

ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ரஸ்செலும், சர்வானும் இணைந்து ஆட்டத்தை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பினர். பந்து வீச்சில் முத்திரை பதித்த ரஸ்செல், பேட்டிங்கிலும் வெளுத்து வாங்கினார்.

இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். நல்ல நிலைமைக்கு அணி முன்னேறி, வெஸ்ட் இண்டீசின் வெற்றி உறுதி என்று நினைத்த போது, எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன.

அணியின் ஸ்கோர் 222 ரன்களை எட்டிய போது ரஸ்செல் (49 ரன், 46 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) டிரெட்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனாலும் சர்வான் களத்தில் நின்றதால் வெஸ்ட் இண்டீசின் நம்பிக்கை தளரவில்லை.

இந்த சூழலில் சர்வான் (31 ரன், 68 பந்து, 3 பவுண்டரி), ரோச் (0) ஆகியோருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தனது ஒரே ஓவரில் இரட்டை செக் வைத்தார். தொடர்ந்து கடைசி விக்கெட்டாக பென் ரன்-அவுட் ஆக, இங்கிலாந்து திரிலிங்கான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. கடைசி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 225 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்துக்கு சென்னை மைதானம் ராசியாக உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்த போதிலும் அதற்குள் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் ஒரு திரிலிங்கான அனுபவம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து பங்கேற்ற 6 ஆட்டங்களிலும் பரபரப்பான கட்டத்துக்கு பிறகே முடிவு கிடைத்துள்ளது.

கடைசி லீக்கில் ஆடிய இங்கிலாந்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியும், இந்தியாவுடன் டையும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அவர்களின் புள்ளி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கால்இறுதி வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

`பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா மட்டுமே கால்இறுதியை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி என்றாலும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil