Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை திருப்பாத ஸ்பின்னர்களை தடை செய்க- கிரேம் ஸ்வான்

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2011 (16:09 IST)
பந்தை திருப்பவியலாத சுழற்பந்து வீச்சாளர்களை தடை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். "நீங்கள் ஸ்பின்னரா பந்தைத் திருப்பவேண்டும், இல்லையேல் அவர்களை ஆட்டத்திலிருந்து அதாவது முதல்தர கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும்." என்றார் கிரகாம் ஸ்வான்.

" பந்தைத் திருப்ப முயலாமல் சுழற்பந்து வீசுவதில் எந்த விதப் பயனும் இல்லை. நான் சில இளம் ஸ்பின்னர்களை காண்கிறேன், அவர்களிடம் நல்ல கட்டுப்பாடு உள்ளது. பந்தை துல்லியமாக இறக்குகின்றனர். ஆனால் பந்தைத் திருப்புவதில் கவனம் செலுத்துவதில்லை.

ஷேன் வார்ன், முத்தையா முரளிதரனை நான் அதிகம் பார்க்கிறேன், ஏனெனில் இவர்கள் பந்தை திருப்ப முயலாமல் இருந்ததேயில்லை. நான் அவர்கள் பாதையில் செல்ல விரும்புகிறேன்.

நான் இப்போது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சிறப்பாகவே வீசிவருகிறேன்." என்று கூறியுள்ளார் கிரேம் ஸ்வான்.

வரும் கோடையில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி பற்றி ஸ்வான் தெரிவிக்கையில், ஒரு அணியின் சிறந்த பேட்ஸ்மெனை வீழ்த்துவதில்தான் எனக்கு திருப்தி அதிகமுள்ளது.

என்னுடைய வாழ்நாளில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மென். அவருக்கு எதிராக வரும் தொடரில் பந்து வீசுவது சவாலானது. அவருக்குப் பந்து வீசுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. என்றார் கிரேம் ஸ்வான்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments