Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரை‌ன் சுழ‌லி‌ல் சுரு‌ண்டது மு‌‌ம்பை இ‌ந்‌திய‌ன்‌ஸ்

Webdunia
வியாழன், 17 மே 2012 (09:06 IST)
FILE
மு‌ம்பை‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த ஐ.‌பி.எ‌ல். போ‌‌ட்டி‌யி‌ன் 65 வது லீக் ஆட் ட‌த்‌தி‌ல் மும்பை இந்தியன்ஸ் அ‌ணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று ப‌ழி‌தீ‌ர்‌த்து கொ‌ண்டது. இ‌ந்த வெ‌‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் அடு‌த்த சு‌ற்று வா‌ய்‌ப்பை கொ‌ல்க‌த்தா ‌பிரகாச‌ப்படு‌த்த‌ி‌யது.

டாஸ் வெ‌ன்ற மும்பை இந்தியன்ஸ் அணி முத‌லி‌ல் பீல்டிங்கை தேர்வு செய் தத ு. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர், விக்கெட் கீப்பர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினர். ஆர்.பி.சிங் வீசிய ஓவரில் 2வது பந்தில் பிரன்டன் மெக்கல்லம் (1) எல்.பி.டபிள ்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட காலிஸ் முதல் பந்திலேயே போல்டு ஆகி நடையை கட்டினார்.

அடுத்து மனோஜ்திவாரி, கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். அ‌திரடியாக ‌விளையாடிய இ‌ந்த ஜோடியை பொ‌ல்லா‌ர்டு ‌பி‌ரி‌த்தா‌‌ர். 27 ர‌ன் எடு‌த்‌திரு‌ந்த கம்பீர் பொல்லார்ட் பந ்‌தி‌ல் போல்டு ஆனார். பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் (13) வெய்ன் சுமித் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனை தொடர்ந்து ய ூசுப் ப‌த ்தான், மனோஜ் திவாரியுடன் இணைந்தார். ந‌ன்றாக ‌விளையாடி கொ‌ண்டிரு‌ந்த மனோஜ் திவாரி 41 ர‌ன்‌ எடு‌த்‌திரு‌ந்தபோது முனாப் பட்டேல் பந்து வீச்சில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் களம் இறங்கிய டெபப்ரதாதாஸ் 2 ரன்னிலும், ரஜத் பாட்டியா 12 ரன்னிலும் நடையை கட்டினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ய ூசுப் ப‌த ்தான் 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 21 ரன் எடுத்தும், சுனில் நரின் 6 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

141 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிப்ஸ், ட ெண்டுல்கர் ஆகியோர் களம் இறங்கினர். 26 ர‌ன்‌னி‌ல் இ‌ந்த ஜோடி ‌பி‌ரி‌ந்தது. 13 ர‌ன்‌ எடு‌த்‌திரு‌ந்த ‌கி‌ப்‌ஸ் இ‌க்ப‌‌ா‌ல் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து ‌ச‌ச்‌சி‌ன் 27 ரன ்‌னி‌ல் ‌வீ‌ழ்‌ந்தா‌ர். அடுத்த 2 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் (20) ஆட்டம் இழந்தார். அடுத்து அம்பத்தி ராயுடு, ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனா‌ல் இ‌ந்த ஜோடி மோசமாக ‌விளையாடியது. இதனா‌ல் கடைசி கட்டத்தில் மும்பை அணிக்கு குறைந்த பந்துகளில் அதிக ரன் அடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

நெருக்கடிக்கு ஆளான அம்பத்தி ராயுடு (11), பொல்லார்ட் (8), வெய்ன் சுமித் (0), ஹர்பஜன்சிங் (1), ரோகித் ஷர்மா (12) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந் ததா‌ல் மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 108 ர‌‌ன்‌னி‌ல் சுரு‌ண்டது. இதனா‌ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெ‌ற்று தோல்விக்கு பழிதீர்த்தது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய கொல்கத்தா வீரர் சுனில் நர ைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

15 வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 9வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது. 15வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 6வது தோல்வி இதுவாகும். மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வர ு‌ம் 20ஆ‌ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது. அதில் வெற்றி கண்டால் தான் மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments