Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி தலைமை மீது அக்ரம் கடும் சாடல்

தோனி தலைமை மீது அக்ரம் கடும் சாடல்
, வியாழன், 1 அக்டோபர் 2009 (15:53 IST)
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியதால் ஏமாற்றம் அடைந்த வாசிம் அக்ரம், தோனியின் தலைமையை கடுமையாக சாடினார். அதாவது தோனி எந்த நேரத்திலும் இந்த தொடரில் ஒரு சிறந்த கேப்டனக செயல்படவில்லை என்று தாக்கினார் வாசிம் அக்ரம்.

"இந்திய வீரர்களுன் உடல் மொழி இந்த தொடர் முழுதும் தன்னம்பிக்கை தரும் விதத்தில் இல்லை, ஹர்பஜன் சிங் பந்து வீச வந்து தேர்ட் மேன் திசையில் ஏகப்பட்ட ரன்களை கொடுத்துக் கொண்டிருந்தார். தோனியின் இடத்தில் நான் இருந்திருந்தால் நேராக ஹர்பஜனிடம் சென்று கவர் திசையில் ரன் எடுக்கட்டும், இந்த திசையில் பந்து வீச வேண்டாம் என்று கூறியிருப்பேன் ஆனால் தோனி செயல்படாமல் இருந்தார்".

என்று கூறிய அக்ரம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கூறுகையில் "நிறைய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது நடந்ள்ளது. ஆரம்பத்தில் மணிக்கு 140 அல்லது அதற்கு மேல் வீசுவார்கள் நாளாக நாளாக அந்த வேகம் குறைந்து மணிக்கு 130 அல்லது 120ஆக தேய்ந்து விடும்.

இவ்வாறு நடக்கும்போது எனது கேப்டனும், குருவுமான இம்ரான் கூறும் அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. வைட், நோ-பால், திசை, அளவு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து வேகத்தைக் குறைக்காமல் வீசிக் கொண்டிருக்குமாறு கூறுவார்." என்று கூறினார் வாசிம் அக்ரம்.

அதே போல் இர்ஃபான் பத்தான் பற்றிக் கூறுகையில் அனைவரிடமும் அறிவுரை பெறும் வழக்கத்தை அவர் கைவிடவேண்டும் என்றார். அதாவது அவர் பந்து வீச்சைப் பார்த்து பந்து வீச்சு பற்றி நுணுக்கங்கள் தெரிந்தவர்களிடம்தான் அறிவுரை கேட்க வேண்டும் என்று கூறினார் வாசிம்.

ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கு புகழாரம் சூட்டினார் வாசிம் அக்ரம். அதாவது 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து விளையாடுகிறார் என்றால் அது எனக்கு அதிசயமாக இல்லை. ஏனெனில் கிரிக்கெட் மீது அவருக்கு அவ்வளவு பிடினானம் உள்ளது என்றார்.

1999ஆம் ஆண்டு சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் குறுக்காக சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இருந்ததை குறிப்பிட்ட வாசிம் அக்ரம், சச்சின் விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி நிச்சயம் என்று எங்களுக்கு தெரியும், அவர் வீழ்ந்தார் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றார் வாசிம் அக்ரம்.

அதேபோல் தன் வாழ் நாளில் தான் வீசியதிலேயே சிறந்த பேட்ஸ்மென் ஆஸ்ட்ரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்தான் என்றார் வாசிம், "களத்தின் இரு புறங்களிலும் பின்னங்காலில் சென்று விளாசக் கூடியவர் கில்கிறிஸ்ட், கட், புல், ஹுக் என்று பன்டு வீசவே முடியாத ஒரு பேட்ஸ்மென் அவர். அவரது கால்கள் வெகுவேகமாக செயலாற்றும்" என்று புகழாரம் சூட்டினார் வாசிம் அக்ரம்.

Share this Story:

Follow Webdunia tamil