Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகே 'டெக்னிக்'-ஐ மறு பரிசீலனை செய்தேன் - தவான்

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகே 'டெக்னிக்'-ஐ மறு பரிசீலனை செய்தேன் - தவான்
, செவ்வாய், 11 மார்ச் 2014 (13:38 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காததையடுத்து தனது டெக்னிக்கை மறு பரிசீலனை செய்தேன் என்று இந்திய துவக்க வீரரும் உலக சாதனைக்கு சொந்தக்காரருமான ஷிகர் தவான் கூறியுள்ளார்.
FILE

தென் ஆப்பிரிக்காவில் 4 இன்னிங்ஸ்களில் 76 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 29. நியூசீலாந்தில் மாறாக ஒரு சதம் மற்றும் ஒரு 98 இரண்டுமே இந்தியா வெற்றி பெறும் நிலைக்குச் செல்ல உதவிய இன்னிங்ஸ்.

தன்னுடைய நியூசீலாந்து எழுச்சிக்குக் காரணம் என்ன என்பதை அவர் பிரபல கிரிக்கெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்:

தென் ஆப்பிரிக்காவில் எனது பேட்டிங் பின்னடைவு கண்டது, அதன் பிறகு காரணங்களை ஆராய்ந்தேன், ஒரு பேட்ஸ்மெனாக, துவக்க வீரராக எந்த ஷாட்களை ஆடவேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
webdunia
FILE

இந்தியாவில் அதிகம் விளையாடியதால் திடீரென பவுன்ஸ், வேகம் காட்டும் பந்து வீச்சு, பிட்ச் மாற்றம் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் பின்னடைவு தேவை அப்போதுதான் பலமான பேட்ஸ்மெனாக திகழ முடியும்.

இந்த பிட்ச்களில் பவுன்சர்களை ஆடாமல் விடவேண்டும் ஏனெனில் பவுன்ஸ் அதிகம் இதனால் கட்டுப்பாடு இர்க்காது என்று உணர்ந்தேன். இதைத்தான் நியூசீலாந்து செல்லும் முன் பயிற்சி செய்தேன். அங்கு சென்றவுடன் பயிற்சி இயல்பாக மாறியத் அதனால் ஸ்கோர் செய்ய முடிந்தது. என்றார் தவான்.

தவான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவுற்றுள்ளது. இதில் அவர் 7 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். கோலிதான் இவருக்கு முன்னால் அதிக சதங்களுடன் உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil