Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வே அணியிடம் மேற்கிந்திய அணி அதிர்ச்சித் தோல்வி

Webdunia
திங்கள், 1 மார்ச் 2010 (11:49 IST)
டிரினிடாடில் நடைபெற்ற 20 ஒவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே 105 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு மேற்கிந்திய அணியை 79 ரன்களுக்கு மட்டுப்படுத்தி அதிர்ச்சி வெற்றி பெற்றது.

மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது என்றாலும் இந்தச் சிறிய இலக்கை எட்ட முடியாமல் போனது.

கிறிஸ் கெய்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அட்ரியன் பரத்தும் சந்தர்பாலும் களமிறங்கினர். பரத் விக்கெட்டை பிரைஸ் கைப்பற்றினார். சந்தர்பால் 20 ரன்களுக்கு லேம்ப் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே ஸ்பின்னர் கிரகாம் கிரீமர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மேற்கிந்திய அணி 26 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

முன்னதாக ஜிம்பாப்வே பேட்டிங் செய்த போது வேகப்பந்து வீச்சாளர் டேரன் சம்மியும், ஸ்பின்னர் சுலைமான் பென்னும் 9 விக்கெட்டுகளைப் பகிர்ர்ந்து கொண்டனர். பென் 4 ஒவர்கள் வீசி 2மைடன்களுடன் 6 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சம்மி 3.5 ஒவர்களில் 26 ரன்களுகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமர் குல் 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்ததும், கென்யா வீரர் நெஹிமையா ஒடியாம்போ 20 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றியதும்தான் இருபது ஓவர் கிரிக்கெட்டின் சாதனையாக இருந்து வருகிறது.

ஜிம்பாப்வே அணியில் ஹேமில்டன் மஸகாட்ஸா 67 பந்துகளில் 44 ரன்களைச் சேகரித்தார். சிகும்பரா கடைசியில் 19 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்து ஜிம்பாப்வே வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ராம்தின் மட்டுமே அதிகபட்சமாக 23 ரன்காள் எடுத்தார். அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் இந்த ஆட்டத்தில் சோபிக்கவில்லை.

இந்த வெற்றி மூலம் இந்த ஒரே ஒரு போட்டி கொண்ட இருபது ஓவர் தொடரை ஜிம்பாப்வே கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments