Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாக் ஆட்டமிழந்தார் இந்தியா 44/1

சேவாக் ஆட்டமிழந்தார் இந்தியா 44/1
, வியாழன், 24 மார்ச் 2011 (19:42 IST)
உலகக் கோப்பை காலிறுதி கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியாவின் 260 ரன்களை எதிர்த்து இந்தியா சற்று முன் சேவாக் விக்கெட்டை இழந்து 8.1 ஓவரில் 44 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 23 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

சற்று முன் ஷேன் வாட்சன் வீசிய சற்றும் எதிர்பாராத ஷாட் பிட்ச் பந்து சற்றே உயரம் அதிகமாக எழும்ப அதனை புல் ஷாட் ஆட முயன்றார் சேவாக். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காமல் வானாளவ கிளம்பியது அதனை மைக் ஹஸ்ஸி எளிதாக பிடித்தார்.

துவக்கத்தில் பிரெட் லீ, ஷான் டெய்ட் வீசிய பதட்டமான ஓவர்களை சச்சினும் சேவாகும் சிறப்பாகவே எதிர்கொண்டனர். சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

கம்பீர் களமிறங்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil