Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூதாட்டத்தில் தந்திரமாக சிக்கவைக்கப்பட்டேன் - மொகமட் ஆமீர்

சூதாட்டத்தில் தந்திரமாக சிக்கவைக்கப்பட்டேன் - மொகமட் ஆமீர்
, செவ்வாய், 20 மார்ச் 2012 (17:54 IST)
FILE
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு நோ-பால்களை வேண்டுமென்றே வீசியதற்காக தடையையும், ஜெயில் தண்டனையையும் அனுபவித்த இளம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆமீர் தன்னை தந்திரமாக சூதாட்டத்தில் சிக்க வைத்தார் மஷர் மஜீத் என்று கூறியுள்ளார்.

சல்மான் பட் தன்னை இதிலிருந்து விடுவிக்க வேண்டியவர் பொறியில் சிக்க வைக்க உதவி புரிந்துள்ளார் என்பதை நினைக்கும்போது பட் மீது ஏகப்பட்ட கோபம் வருகிறது என்று கூறினார் ஆமீர். தற்போது இவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

வங்கிக் கணக்கு விவரங்களை அலி என்பவருக்கு எஸ்.எம்.எஸ் செய்ததாக் கூறிய ஆமீர், ஆனால் வங்கிக் கணக்கு விவரங்கள் எதற்கு என்று அவருக்கு பல செய்திகளை அனுப்பியுள்ளார் ஆமீர், ஆனால் எதற்கும் பதிலும் வரவில்லை, பணமும் அக்கவுண்டில் போடப்படவில்லை.

ஆனால் இந்தக் குறுஞ்செய்திகளை அனுப்பியதால் ஆமீர் வசமாக மாட்டிக் கொண்டார் என்று மஷர் மஜீத் ஆமீரை அச்சுறுத்தியுள்ளார். அதாவது அலியுடன் ஆமீர் நடத்திய உரையாடல் குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் ஐ.சி.சி. சூதாட்டத் தடுப்பு பிரிவினர் பார்வைக்குச் சென்றதாக மஷர் மஜீத் ஆமீரை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து தன்னால் ஆமீரை காப்பற்ற முடியும் என்றும் அதற்காக ஆமீர் ஒரு சிறு உபகாரம் செய்யவேண்டுமென்றும் மஜீத் கேட்டுள்ளார்.

அந்தச் சிறு உபகாரம்தான் இரண்டு நோ-பால்களை வீசும் உபகாரம்! "நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்! ஐ.சி.சி. உளவு பற்றி கூறிய மஜீத் என்னை இரண்டு நோ-பால்களை வீசக்கோருகிறார் இந்த முரண்பாட்டைக் கூட நான் யோசிக்காத முட்டாளாக இருந்தேன். ஏனெனில் நான் பதட்டத்தில் இருந்தேன்.

இதனால் இரண்டு நோ-பால்களை வீசவில்லையென்றால் நாம் காப்பற்றப்படமாட்டோம், அவர்கள் உண்மையில் எனக்கு உதவி புரிகிறார்கள் என்று முட்டாள்தனமாக நம்பினேன். அதைத்தான் நான் அப்போது யோசித்துக் கொண்டிருந்தேன், கடைசியில் நோபால்களை வீசியே விட்டேன்.

நான் பணத்திற்காக இதை செய்ததாகவே அனைவரும் கருதுகின்றனர், ஆனால் நடந்தது இதுதான்.

சல்மான் பட் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், அவர் எனக்கு பெரிய சகோதரர் போல்தான் இருந்தார். ஆனாலும் அவர் எனது அப்பாவித் தனத்தை பயன்படுத்திக் கொண்டார். காரில் மஷர் மஜீத் என்னிடம் இதையெல்லாம் பேசிய போது பின் சீட்டில் கல்லூளிமங்கனாக சல்மான் பட் வாளாயிருந்தார் என்று கூறினார் மொகமட் ஆமீர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கிறேன், அவர்கள் கோபம் நியாயமானதே! என்றார் மொகமட் ஆமீர்.

News Summary: Pakistan cricketer Mohammad Aamir has said that he was tricked into spot-fixing by Salman Butt and bookie Mazhar Majeed, and that he did not bowl no balls against England for money.

Share this Story:

Follow Webdunia tamil