Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் மொகமட் ஆமீர்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் மொகமட் ஆமீர்
, வியாழன், 2 பிப்ரவரி 2012 (12:20 IST)
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கபப்ட்ட பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆமீர் போர்ட்லாந்தில் உள்ள இளையோர் குற்றவாளிகள் சிறையிலிருந்து 3 மாத தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

அடுத்த சில வாரங்களை லண்டனில் கழிக்கவுள்ள மொகமட் ஆமீர் அதன் பிறகு பாகிஸ்தானுக்குத் திரும்புகிறார்.

அதன் பிறகு அவர் கிரிக்கெட்டிலிருந்து அவர் 5 ஆண்டுகாலம் தடை செய்யபப்ட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிகிறது.

வரும் மார்ச் மாதம் வரை இங்கிலாந்தில் அவர் இருக்க விசா காலம் உள்ளது. நவம்பர் 2011ஆம் ஆண்டு லண்டன் நீதிமன்றம் ஆமீர், ஆசிப், சல்மான் பட் ஆகியோருக்கு சிறைத் தணடனை விதித்தது.

சல்மான் பட் இரண்டரை ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றார். ஆசிப் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்களை சூதாட்டத்திற்குள் ஈடுபடுத்திய சூதாடி மஷர் மஜீதிற்கு 2 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை கிடைத்தது.

பிரிட்டன் சட்டப்படி இவர்கள் தங்கள் சிறைத் தண்டனைக் காலங்களில் பாதியை கழித்தாலே விடுவிக்கத் தகுதியானவர்களாகின்றனர்.

இந்த அடிப்படையில் தற்போது 6 மாதம் தண்டனை பெற்ற ஆமீர் 3 மாத காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil