Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன் கோப்பை வெற்றி! இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

சாம்பியன் கோப்பை வெற்றி! இவர்கள் என்ன கூறுகிறார்கள்?
, திங்கள், 24 ஜூன் 2013 (16:14 IST)
FILE
பலவிதமான சர்ச்சைகளுக்கு இடையே அமைதியாக, ஆனால் அபாரமாக விளையாடி சாம்பியன்ஸ் கோப்பை மகுடத்தையும் சூட்டிக்கொண்டுள்ள இந்திய அணியின் இந்த அபார வெற்றி பற்றி சில 'முன்னாள்கள்' என்ன அபிப்ராயப்படுகிறார்கள்? இதோ:

webdunia
FILE
சுனில் கவாஸ்கர்: இந்த அணி உண்மையில் ஒரு சிறந்த அணிதான். விளையாடிய விதம், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற விதம் உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு மீண்டு வந்து வெற்றி பெற்றது என்பதைத் தொடர்ந்து இந்தத் தொடர் முழுதும் செய்துவந்துள்ளனர்.

தோனி சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் திறமை படைத்தவர். அவரது பொறுமையான குணம் புகழ் மற்றும் தோல்வி இரண்டையும் நடுநிலையுடன் அணுக வைக்கிறது. இதுதான் கடினமான சூழ்நிலைகளிலிருந்து அணியை மீட்க அவருக்கு உதவுகிறது என்று கருதுகிறேன்.

குண்டப்பா விஸ்வநாத்: இது அருமையான வெற்றி, நாங்கள் இந்த அணி வெல்லும் என்று எதிர்பார்த்தோம், அதுவும் இந்தத்தொடரை இவர்கள் துவங்கிய விதம் அபாரம். தோனிக்கு முழுப்பாராட்டுக்கள். இப்போது அவர் வசம் அனைத்து உலக கிரிக்கெட் சாம்பியன் பட்டங்களும் உள்ளன. இந்தியா இடுவரை கண்டிராத அற்புதமான கேப்டன் தோனிதான்.

webdunia
FILE
ஸ்ரீகாந்த்: இது ஒரு அபாரமான வெற்றி. ஒருநாள் போட்டிகளில் நம்மை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். 2011-இல் உலகக் கோப்பையை வென்றனர். தற்போது அது ஒன்றும் ஃப்ளூக் அல்ல என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர்.

கெய்க்வாட்: இந்தியனாக இந்தத் தருணத்தில் பெருமை அடைகிறேன். ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டை ஆடினர். குறைந்த இலக்கு எப்போதும் அபாயமானது. ஆனால் நெருக்கடியில் நல்ல மனோதிடத்துடன் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.

சந்து போர்டே: 1983-இலும் குறைந்த ரன் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு இந்தியா கபில் தலைமையில் அபாரமாக போராடி வென்றது. அதேபோல்தான் நேற்றும் குறைந்த இலக்கை நிர்ணயித்துவிட்டு அபாரமாக விளையாடினர்.

அஜித் வடேகர்: இது ஒரு அருமையான வெற்றி! தோனிக்கு பாராட்டுக்கள். சச்சின், திராவிட் போன்றவர்கள் இல்லாவிட்டாலும் இளைம் வீரர்களை வைத்துக் கொண்டு ஒருங்கிணைந்து கொண்டு சென்றது அபாரம், இவர்தான் இந்தியாவின் சிறந்த கேட்பன் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவுக்கு இதுவரை இல்லாத பெரிய கேப்டன் தோனிதான் என்று இதிலிருந்து புரிகிறது.

பிரசன்னா: இந்த வெற்றி இந்திய அணி சிறந்த அணி என்பதையும் தோனி சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்துள்ளது. ஜடேஜா இந்தியாவின் சொத்தாகி வருகிறார். அஷ்வினும், ஜடேஜாவும் சிறந்த ஸ்பின் கூட்டணி அமைத்துள்ளனர்.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: இங்கிலாந்து கடைசியில் பதட்டமடைந்தனர். அப்போது நெர்வ் உள்ள இந்திய அணி வென்றது. இப்போது உலக கிரிக்கெட்டை நாம்தான் ஆதிக்கம் செலுத்துகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil