Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின் டெண்டுல்கருக்கு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கான ஈ.எஸ்.பி.என். விருது

சச்சின் டெண்டுல்கருக்கு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கான ஈ.எஸ்.பி.என். விருது
, செவ்வாய், 21 பிப்ரவரி 2012 (04:38 IST)
சச்சின் டெண்டுல்கர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்.இன்ஃபோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கேப்டவுன் போட்டியில் சிறப்பாக ஆடி 146 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.

தேர்வுக்குழு பரிந்துரைத்த 3 பேர் பட்டியலில் சச்சின், திராவிட், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும், இறுதியில் சச்சினுக்கே விருது கிடைத்துள்ளது.

சச்சின், இரண்டாவது முறையாக ஈ.எஸ்.பி.என் கிரிக்.இன்ஃபோ விருதைப் பெறுகிறார். இதற்கு முன்னதாக 2009-ல் ஒருநாள் போட்டிக்காக இந்த விருதை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாதில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 175 ரன்கள் குவித்ததன் மூலம் விருது கிடைத்தது.

டெஸ்ட் போட்டியின் சிறந்த பüலருக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்.இன்ஃபோ விருது நியூஸிலாந்து பவுலர் டக் பிரேஸ்வெல்லுக்கு கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 63 பந்துகளில் 123 ரன்கள் குவித்து அயர்லாந்தின் வெற்றிக்கு உதவிய கெவின் ஓ"பிரையனுக்கு ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்.இன்ஃபோ விருது கிடைத்துள்ளது.

ஒருநாள் போட்டியின் சிறந்த பüலருக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்.இன்ஃபோ விருது ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனுக்கு கிடைத்துள்ளது. இலங்கையின் பல்லகெல்லேவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜான்சன்.

Share this Story:

Follow Webdunia tamil