சச்சினே சிறந்த பேட்ஸ்மென் - பிரையன் லாரா புகழாரம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (13:12 IST)
லண்டனில் தோனிய ின ் 'கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன' விருந்துணவு நிகழ்ச்சியில் நடந்த குழு விவாதத்தில் பங்கேற்ற மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர்தான் உலகில் சிறந்த பேட்ஸெமென் என்று புகழாரம் சூட்டினார்.

விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டூவர்ட் கூறுகையில் 'சச்சின் டெண்டுல்கர் நவீன பிராட்மேன்' என்றார்.

"16 வயதில் கிரிக்கெட்டைத் தொடங்கிய சச்சினுக்கு இன்று வயது 38, இவரை விட சிறந்த பேட்ஸ்மெனைக் காண முடியாது. உலகில் சச்சின் டெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மென்" என்று லாரா கூறினார்.

மேலும் லார்ட்சில் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 100-வது சதத்தை எடுக்கப்போவதைத் தான் நேரில் காணவுள்ளதாகவும் பிரையன் லாரா தெரிவித்தார்.

இந்திய வீரர் ராகுல் திராவிட் கூறுகையில், "இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். சச்சினும் அதில் ஒருவர் என்றார்".

லாரா பற்றிக் கூறிய அலெக் ஸ்டூவர்ட், லாரா 80-களின் சிறந்த பேட்ஸ்மென், ஆனால் தற்போது லாராவை விட சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மென் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

Show comments