Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்குப் பிறகு மட மட... இந்தியா 264 ரன்கள்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (17:52 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கையால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட இந்தியா 39 ஓவர்களி 195/3 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை மட்டுமே எடுத்தது.
FILE

கோலி அஜந்தா மெண்டிஸ் பந்தில் பவுல்டு ஆகி 48 ரன்களில் வெளியேறியபோது தவான் 76 ரன்கள் எடுத ்த ிருந்தார். ஆனால் அவரே அதன் பிறகு 18 ரன்கள் மட்டுமே எடுத்து 94 ரன்களில் அஜந்தா மெண்டிஸின் ஒன்றுமில்லாத நேர் பந்தில் பவுல்டு ஆனார். பந்து எழும்பவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர் சாதுரியமாக ஆஃப் ஸைடை வலுப்படுத்தி லெக் திசையில் இடைவெளி விட்டார் அந்த பொறியில் சிக்கினார் தவான், நேர் பந்தை லெக் திசையில் அடிக்க முயன்று பவுல்டு ஆனார். 114 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர்.

கார்த்திக் களமிறங்கி அதே ஓவரில் ஒரு அற்புதமான கட் ஷாட்டில் பவுண்டரி அடித்து இந்திய ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினார். ஆனால் கடைசி பந்து கேரம் பால் ஆக சற்றே கூடுதலாக எழும்ப வாரிக்கொண்டு அடிக்கப்போய் கொடியேற்றினார். அருகிலேயே டெசில்வா கையில் கேட்ச் ஆனது.
FILE

ரஹானேயும் தவானும் இணைந்து 45 ரன்களைச் சேர்த்தனர் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் சேன நாயகே பந்தை விளாச நினைத்து பாயிண்டில் கேட்ச் கொடுத்து 22 ரன்னில் வெளியேறினார்.

ராயுடு 18 ரன்கள் எடுத்து ஆடிவந்தபோது இடது கை ஸ்பின்னர் டிசில்வா பந்தை நேராக மிட் ஆபில் குறி பார்த்து கேட்ச் கொடுத்தார். இவரிடமெல்லாம் என்ன பிரச்சனை எனில் ரேஞ் ஆஃப் ஷாட்ஸ் கிடையாது.

அஷ்வினை அடுத்து இறக்கியிருக்கவேண்டும், ஆனால் ஸ்டூவர்ட் பின்னியை இறக்கினார் அவரது முதல் சர்வதேச பேட்டிங் ஆகும் இது ரன் எடுக்கவில்லை சேனநாயகேவின் நேர் பந்தில் எல்.பி. ஆகி போய்க்கொண்டேயிருந்தார்.
FILE

அஷ்வின் 18 ரன்கள் எடுத்தது பயனுள்ள பங்களிப்பு, ஜடேஜா ஒரு அற்புத சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்.

கடைசியில் மொகமட் ஷமி, அஜந்தா மெண்டிஸை எப்படி ஆடவேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். இரண்டு பந்துகள் லாங் ஆனில் 96 மீ சிக்ஸர்களுக்குப் பறந்தது. 7 பந்துகளில் 14 நாட் அவுட். இந்தியா கடைசி 5 ஓவர்களில் 40 ரன்கள் எடுக்க கடைசியில் 264 ரன்கள் எடுத்தது. 9 விக்கெட்டுகள் சரிந்தது.

அஜந்தா மெண்டிஸ் 60 ரன்களுக்கு 4 விக்கெட், மலிங்கா 58 ரன் ஒரு விக்கெட், சேனநாயகே அற்புதமாக வீசி 41 ரன்கள் 3 விக்கெட்.

இந்தியா வெற்றி பெற பந்து வீச்சு, ஃபீல்டிங் அபாரமாக இருக்கவேண்டும், திரிமன்ன, சங்கக்காரா, மேத்யூஸ், ஜெயவர்தனே விக்கெட்டுகள் மிக முக்கியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments