Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெ‌ய்‌ல் சொத‌ப்ப‌ல் - ‌நியூ‌ஸிலா‌ந்து வெ‌ற்ற‌ி

கெ‌ய்‌ல் சொத‌ப்ப‌ல் - ‌நியூ‌ஸிலா‌ந்து வெ‌ற்ற‌ி
, வியாழன், 12 ஜூலை 2012 (11:10 IST)
மே‌ற்‌கி‌‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி ‌வீர‌ர் கெ‌ய்‌ல் சொத‌ப்‌பியதா‌ல் 3வது ஒருநா‌ள் ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் 88 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி வெ‌ற்‌றி பெ‌ற்றது.

முத‌லி‌ல் பே‌ட்டி‌ங் செ‌ய்த ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி 50 ஓவ‌ர்க‌ளி‌ல் 9 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 249 ர‌ன்க‌ள் எடு‌த்தது.

தொட‌க்க ‌வீர‌ர் ‌நி‌க்கோ‌ல் 59 ர‌ன்னு‌ம், வா‌ட்‌லி‌ங் 40 ர‌‌ன்னு‌ம், மெ‌க்கு‌ல்ல‌ம் 50 ர‌ன்னு‌ம் எடு‌த்தன‌ர். ம‌ற்ற ‌வீ‌ர‌ர்‌க‌ள் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ‌வீ‌ழ்‌ந்தன‌ர்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி ‌வீரர‌் ரூ‌ஸ்செ‌ல் 4 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். நரே‌ன் 2, ‌பிராவோ, ச‌மி, சாமுவே‌ல்‌ஸ் தலா ஒரு ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

250 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌‌க்குட‌ன் கள‌ம் இற‌ங்‌கிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌‌ள் அ‌ணி 34.3 ஓவ‌ரி‌ல் 161 ர‌ன்னு‌‌க்கு ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது.

தொ‌ட‌க்க ‌வீ‌ரரு‌ம் அ‌திரடி ம‌ன்னனுமான கெ‌ய்‌ல் 11 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். 22 ப‌ந்துகளை ச‌‌ந்‌தி‌த்த அவ‌ர் 2 பவு‌ண்ட‌ரிக‌‌ள் ம‌ட்டுமே அடி‌த்தா‌ர்.

ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் சா‌ர்ல‌ஸ் 15 ர‌ன்‌னி‌ல் ‌வீ‌ழ்‌ந்தா‌ர். அ‌திரடி ஆ‌ட்ட‌க்கார‌ர் பொ‌ல்லா‌ர்டு 16 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். சாமுவே‌ல்‌ஸ் (11), கட‌ந்த போ‌ட்டி‌யி‌‌ல் சத‌ம் அ‌டி‌த்த ‌ஸ்‌மி‌த் 19 ர‌ன்‌னி‌ல் ‌வீ‌ழ்‌ந்தா‌ர்.

அ‌திகப‌ட்சமாக ரூ‌ஸ்செ‌ல் 42 ர‌ன்‌க‌ள் எடு‌த்தா‌ர். ம‌ற்ற ‌வீ‌ர‌ர்க‌‌ள் சொ‌ல்லு‌ம் அளவு‌க்கு ‌விளையாட ‌வி‌ல்லை. இதனா‌ல் ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி 88 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றது.

நியூ‌ஸிலா‌ந்து தர‌ப்‌‌பி‌ல் பெள‌வு‌ல்‌ட் ஓர‌ம், மெ‌க்கு‌ல்ல‌ம் தலா 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளையு‌ம், செள‌தி ஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌‌ப்ப‌ற்‌றின‌ர். ஆ‌ட்ட நாயகனாக ‌நி‌க்கோ‌ல் தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

5 போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட ஒரு நா‌ள் தொட‌ரி‌ல் 2-1 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது. 4வது போ‌ட்டி வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி நட‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil