Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லைப் போல் அதிரடி ஆட்டம் முடியுமா? -வீரத் கோலி புகழாரம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (14:41 IST)
FILE
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி வரும் வீரத் கோலி அதே அணியில் உள்ள மேற்கிந்திய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லைப்போல் அச்சமூட்டும் அதிரடி ஆட்டத்தை ஒருவராலும் ஆட முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து வீரத் கோலி கூறுகையில், "கெய்ல் போன்ற அதிரடி ஆட்டக்காரரை போல் விளையாட முயற்சிப்பதை விட தங்களது பலத்துக்கு தக்கபடி விளையாடுவதே சிறந்ததாகும் என்பதை நான் உணருவேன். கெய்லின் அதிரடிக்கு ஏற்ப ஆட நினைப்பது முடியாத காரியமாகும். அவரால் மட்டுமே அதுபோல் அதிரடியாக ஆட முடியும். உலகிலேயே கிரிக்கெட் பந்தை கடினமாக அடித்து விளையாடக்கூடியவர் கெய்ல் தான்.

கெய்ல் போன்ற வீரருடன் இணைந்து ஆடுகையில் எதிர்முனையில் நிற்பவருக்கு நிச்சயம் அச்சுறுத்தல் ஏற்படும். அத்துடன் அவர் அதிரடியாக ரன் குவிக்கும் வேகத்தை பார்க்கையில் நெருக்கடி உருவாகும். அந்த நெருக்கடிக்கு ஆளாகி விட்டால் விக்கெட்டை பறிகொடுக்க வேண்டிவரும்.

அவர் எதிர்முனையில் அடித்து ஆடுவதால் நாம் ரன் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் விக்கெட்டை விழாமல் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினாலே போதும்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அணித் தலைவர் விட்டோரி காயம் அடைந்ததால் சில போட்டிகளில் அணித் தலைவராக பணியாற்றினேன். அது மிக மகிழ்ச்சி தரும் அனுபவமாக அமைந்தது. முதலில் சற்று பதற்றம் இருந்தது. ஆனால் களத்தில் சற்று நேரம் கடந்ததும் பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வீரர்களும் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள்.

பெங்களுர் ராயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருந்த டிராவிட்டிடம் இருந்து பொறுமையையும், நெருக்கடியான சூழ்நிலையிலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக செயல்படும் திறனையும், கும்பிளேயிடம் இருந்து கடைசி பந்து வரை முழு திறனையும் வெளிப்படுத்துவதுடன், அணி வீரர்களையும் ஊக்கப்படுத்தும் பாங்கையும் உள்வாங்க நான் விரும்புகிறேன்.

நெருக்கடியான கட்டத்தில் அணித் தலைவர் வெட்டோரி பந்து வீச்சாளர்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படும் முறையையும் பின்பற்ற நினைக்கிறேன்.

2009 ஆம் ஆண்டில் எங்கள் அணி சிறப்பானதாக இருந்தது. கும்பளே, டிராவிட், கலிஸ், ரோஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன், பவுச்சர், ஸ்டெயின் உள்ளிட்ட தரமான வீரர்கள் அணியில் இடம் பிடித்து இருந்தனர். தற்போதைய அணியில் பெரிய வீரர்களான டிவில்லியர்ஸ், சகீர்கான், கெய்ல், விட்டோரி ஆகியோர் உள்ளனர்.

இந்த அணியும் வலுவானதாகவே இருக்கிறது. பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடுவதை மீண்டும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்றார்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments