Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்ளேயிடம் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (16:41 IST)
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் சர்ச்சையில் மைக்கேல் கிளார்க் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து உடனே நடையைக் கட்டாமல் மைதானத்தில் அதிக நேரம் நின்றது மற்றும் கங்கூலிக்கு 2வது இன்னிங்சில் தரையில் பட்டு கேட்ச் பிடித்தது ஆகியவை குறித்து கும்ளே கடுமையாக விமர்சனம் செய்தார். மைக்கேல் கிளார்க் தான் தவறு செய்துவிட்டதாக இந்திய அணித் தலைவர் கும்ளேயிடம் மன்னிப்பு கோரியதாக ஆஸ்ட்ரேலிய செய்தி ஊடகங்கள ் தெரிவிக்கின்றன.

அனில் கும்ளேயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கிளார்க் தனது செயலுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சவ்ரவ் கங்கூலியின் கேட்சைத் தான் முறையாகத்தான் பிடித்தேன் என்பதில் இன்னமும் பிடிவாதம் காட்டி வருகிறார்.

மைக்கேல் கிளார்க் மன்னிப்பு கேட்டுள்ளதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பதட்டமான சூழல் சற்றே குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்திய- ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை மறு நாள் தொடங்குகிறது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments