Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் செய்தி; T20: தோல்வியச் சந்தித்தது இங்கிலாந்து

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (09:10 IST)
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதன் மூலம் சர்வதேச போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து

லண்டன் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்தத் தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மேற்கிந்தியத்தீவுகள் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

20 ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோரும் இதுவேயாகும். 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1௧ என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளின் அறிமுக பந்து வீச்சாளர் கேரி மாதுரின் 4 ஓவர்கள் பந்து வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னாதாக பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் சார்லஸ் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் 3-வது ஓவரில் இருந்தே சரிவு தொடங்கியது. ஹால்ஸ் (2 ரன்), கீஸ்வெட்டர் (10 ரன்), போபாரா (3 ரன்), படேல் (2 ரன்) என அவுட் ஆனார்கள். ஸ்டோக்ஸ் மட்டும் சிறிது தாக்குப்பிடித்து விளையாடி 31 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி சுமார் 3 மாதங்களாக தான் பங்கேற்ற எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் இருந்தது. இப்போது மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடைசியாக ஜூலை 3-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

அடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என எதிலும் இங்கிலாந்து தோல்வியடையவே இல்லை.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments