Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ல்லா டெ‌ஸ்‌ட்- வெற்றியை நோ‌க்‌கி ஆஸ்‌‌ட்ரேலியா

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (10:57 IST)
கா‌ல்லே‌வி‌ல ் நட‌‌ந்த ு வரு‌ம ் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ ்‌ ட்ரேலிய அணி வெற்றிய ை எ‌தி‌‌ர்கொ‌ண்டு‌ள்ளத ு.

முதல் இன்னிங்சில் முறையே ஆஸ ்‌ ட்ரேலியா 273 ரன்களும், இலங்கை 105 ரன்களும் எடுத்தன. பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ ்‌ ட்ரேலிய அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. ஆஸ்ட‌்ரேலிய அணி உணவு இடைவேளைக்கு பிறகு 2வது இன்னிங்சில் 59.2 ஓவர்களில் 210 ரன்னுக்கு அனை‌த்த ு ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் இழ‌ந்தத ு. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இலங்கைக்கு 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

பரனவிதனா (0), த ி‌‌ ல்சான் (12), சங்கக்கரா (17), சமரவீரா (0), பிரசன்ன ஜெயவர்த்தனே (0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மஹேலா ஜெயவர்த்தனே 57 ரன்னுடனும், மேத்யூஸ் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ ்‌ ட்ரேலிய அணி தரப்பில் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ ்‌ ட்ரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இலங்கை அணி வெற்றிக்கு இன்னும் 259 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அணி கைவசம் 5 விக்கெட்டுகள் தான் உள்ளது.

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

Show comments