Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ல்லா டெ‌ஸ்‌ட்- வெற்றியை நோ‌க்‌கி ஆஸ்‌‌ட்ரேலியா

கா‌ல்லா டெ‌ஸ்‌ட்- வெற்றியை நோ‌க்‌கி ஆஸ்‌‌ட்ரேலியா
, சனி, 3 செப்டம்பர் 2011 (10:57 IST)
கா‌ல்லே‌வி‌லநட‌‌ந்தவரு‌மஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்‌ட்ரேலிய அணி வெற்றியஎ‌தி‌‌ர்கொ‌ண்டு‌ள்ளது.

முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்‌ட்ரேலியா 273 ரன்களும், இலங்கை 105 ரன்களும் எடுத்தன. பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்‌ட்ரேலிய அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. ஆஸ்ட‌்ரேலிய அணி உணவு இடைவேளைக்கு பிறகு 2வது இன்னிங்சில் 59.2 ஓவர்களில் 210 ரன்னுக்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌மஇழ‌ந்தது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இலங்கைக்கு 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

பரனவிதனா (0), தி‌‌ல்சான் (12), சங்கக்கரா (17), சமரவீரா (0), பிரசன்ன ஜெயவர்த்தனே (0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மஹேலா ஜெயவர்த்தனே 57 ரன்னுடனும், மேத்யூஸ் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்‌ட்ரேலிய அணி தரப்பில் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்‌ட்ரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இலங்கை அணி வெற்றிக்கு இன்னும் 259 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அணி கைவசம் 5 விக்கெட்டுகள் தான் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil