Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீர் சதம், சேவாக் அவுட்: இந்தியா-244/1

கம்பீர் சதம், சேவாக் அவுட்: இந்தியா-244/1
கான்பூர் , செவ்வாய், 24 நவம்பர் 2009 (13:26 IST)
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த சேவாக் 132 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் கம்பீர் தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கான்பூரில் இன்று துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதன் பின்னர் விரைவாக ரன்களை சேகரித்தனர்.

இதில், சேவாக் 97 பந்துகளில் தனது 16வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சேவாக் 131 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கம்பீர் 8வது சதம்: எனினும், நிதானத்தை கடைப்பிடித்து விளையாடிய மற்றொரு துவக்க வீரர் கௌதம் கம்பீர், டெஸ்ட் போட்டிகளில் தனது 8வது சதத்தை பூர்த்தி செய்தார். இலங்கைக்கு எதிராக அவர் விளாசும் 2வது சதம் இது.

இன்னிங்சின் 42வது ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கம்பீர் 108 ரன்கள், திராவிட் ஒரு ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil