Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் மோதல்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (18:03 IST)
FILE
சேப்பாக்கத்தில் புதன்கிழமை அன்று துவங்கும் ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் 5ஆம் போட்டித் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்பஜன் சிங் தலைமை மும்பை இந்தியன் அணியும் மோதுகின்றன.

கடுமையான இந்தியத் தோல்விகளுடன் களமிறங்கும் தோனி தனது 3வது ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் நோக்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி பேப்பரில் பலமாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிரடி மன்னன் ரிச்சர்ட் லெவி புதிதாக வந்துள்ளார். இவர் சமீபத்தில் சர்வதேச T20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் எடுத்து சாதனை புரிந்தவர். இவர் தவிர கெய்ரன் போலார்ட் உள்ளார்.

மேலும் தினேஷ் கார்த்திக்கையும் மும்பை இந்தியன் அணி விக்கெட் கீப்பிங்கிற்காக தேர்வு செய்துள்ளது. சிக்கன இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜாவும் மும்பையில் உள்ளார். மேலும் ஹெர்ஷெல் கிப்ஸ், ஆஸ்ட்ரேலிய இடது கை வீச்சாளர் மிட்செல் ஜான்சன், ஆர்.பி.சிங், இலங்கையின் திசரா பிரேரா ஆகியோரும் மும்பை இந்தியன்ஸுக்கு பலம் சேர்க்கின்றனர்.

பந்து வீச்சில் முனாப் படேல், லஷித் மலிங்கா பலம் சேர்க்கின்றனர்.

சென்னை அணியில் ரெய்னா, மைக் ஹஸ்ஸி, கேப்டன் தோனி ஆகிய மூத்த வீரர்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்ட் திறமையும் பலம் சேர்க்கும். பந்து வீச்சில் ஹில்ஃபென் ஹாஸ், டக்கி போலிஞ்சர், ஆல்பி மோர்கெல், ஜடேஜா, குலசேகரா, சூரஜ் ரந்தீவ் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர் இவர்கள் தவிர தோனிக்கு பல முறை பக்கபலமாக இருந்து வரும் ஆல்-ரவுண்டர் அஷ்வின் இருக்கவே இருக்கிறார்.

கேப்டன்சியை உதறிய சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சர்வதேச சதம் என்ற சுமையையும் இறக்கி வைத்துள்ளார் எனவே இவர் ஒரு அபாய வீரராக இந்தப் போட்டியில் உருமாற வாய்ப்புள்ளது.

இவர் தவிர அம்பாட்டி ராயுடு ரோஹித் ஷர்மா ஆகியோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கவுள்ளனர்.

முதல் போட்டியில் வென்று அந்த ரிதம் செட் ஆவதை இரு அணிகளுமே விரும்பும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

பல வண்ணங்களுடன் குறைந்த ஆடை அழகிகள் நடனம் செய்ய நாளை முதல் துவங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, கிரிக்கெட் ஆட்டம் நடந்தால் சரிதான்!

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments