Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம்-அக்ரம், வாஹ் சேர்ப்பு

ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம்-அக்ரம், வாஹ் சேர்ப்பு
, வியாழன், 1 அக்டோபர் 2009 (13:06 IST)
புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம் என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பெயரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், இடது கை வேகப்பந்து வீச்சில் முன்னணி பேட்ஸ்மென்களை திணறச் செய்தவருமான வாசிம் அக்ரம் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் தன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று கூறிய ஸ்டீவ் வாஹ், கிரிக்கெட்டின் அனைத்து கால மேதைகளின் வரிசையில் என் பெயரௌம் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியது என்று கூறினார் ஸ்டீவ் வாஹ்.

அதே போல் வாசிம் அக்ரமும், தனது சீரான கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிடைத்த கௌரவம இது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று கூறிய அக்ரம் குறிப்பாக சேப்பாக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது 40,000 ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்ததது மறக்க முடியாத அனுபவம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil