Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இறுதிப்போட்டி பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது

Ilavarasan
ஞாயிறு, 11 மே 2014 (16:59 IST)
ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் (ஜூன் 1 ஆம் தேதி) நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
 
7 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 1 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பையில் இருந்து மாற்றப்பட்டது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் (ஜூன் 1 ஆம் தேதி) நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. மாற்றத்துக்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தில் 3 கேலரிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி தடையில்லா சான்றிதழ் வழங்க மாநகராட்சி மறுத்துவிட்டது.
 
இதனால் சென்னையில் போட்டியை நடத்த முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து சென்னையில் நடக்க இருந்த 4 போட்டிகளும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
 
மே 18, 22 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் நடக்க இருந்த இரு ‘லீக்’ ஆட்டம் ராஞ்சிக்கும், முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (மே27) கொல்கத்தாவுக்கும் வெளியேற்றுதல் (மே.28) சுற்று ஆட்டம் மும்பைக்கும் மாற்றப்பட்டுள்ளது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments