Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பை இருபது-20: இன்றைய போட்டிகள்

உலகக்கோப்பை இருபது-20: இன்றைய போட்டிகள்
லண்டன் , செவ்வாய், 9 ஜூன் 2009 (11:28 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பி-பிரிவில் நடக்கும் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதால் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

பி-பிரிவில் நடந்த முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை நெதர்லாந்து வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் நெதர்லாந்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதேபோல் டி-பிரிவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தென்ஆப்ரிக்கா-நியூஸீலாந்து அணிகள் மோதுகின்றன. இது சம்பிரதாயப் போட்டியாக கருதப்பட்டாலும், இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil