Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபது-20: ஆஸ்ட்ரேலிய அணித்தலைவராக கிளார்க் நியமனம்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2009 (15:46 IST)
ஆஸ்ட்ரேலிய இருபது-20 அணியின் தலைவராக மைக்கேல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் கேமரூன் வொய்ட் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய கிளார்க், “ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து தாம் நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். அவரது வழியைப் பின்பற்றி நடப்பேன். இருபது-20 அணியை வழிநடத்திச் செல்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறத ு ” என்றார்.

வெஸ்ட்இண்டீஸில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி இருபது-20 உலகக்கோப்பை தொடரை வெல்வதே எங்களின் இலக்கு. ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளதால் இது சாத்தியமாகும் என நம்புகிறேன் என்றும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இருபது-20 போட்டிகளில் இருந்து ஆஸ்ட்ரேலிய ஒருநாள், டெஸ்ட் அணியின் தலைவர் பாண்டிங் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments