Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது ஆஸி.

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது ஆஸி.
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2009 (16:39 IST)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளதால், 7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது ஆஸி.

டாஸில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா 43.4 ஓவரில் வெற்றி இலக்கான 221 ரன்களை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ 9 ஓவர்க்ள் வீசி 49 ரன் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தது அந்த அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.



Share this Story:

Follow Webdunia tamil