Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்ட்ரேலியாவுடனான தொடருக்கு தில்ஷான் கேப்டன்

ஆஸ்ட்ரேலியாவுடனான தொடருக்கு தில்ஷான் கேப்டன்
, வெள்ளி, 22 ஜூலை 2011 (15:15 IST)
அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணிக்கு திலகரத்ன தில்ஷான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் துணைக் கேப்டன் பெயர் அறிவிக்கப்படவில்லை.

3 டெஸ்டுகள், 5 ஒருநாள் போட்டிகள், 2 டுவென்டி20 போட்டிகளுக்கு தில்ஷான் தலைமை வகிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி டுவென்டி20 போட்டியாகும். ஆகஸ்ட் 6-ம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது.

அணி வீரர்கள் விவரம்:

தில்ஷான் (கேப்டன்), மகிளா ஜெயவர்தன, சங்ககார, மாத்யூஸ், கபுகேதரா, ஜீவன் மெண்டிஸ், சமர சில்வா, தினேஷ் சாண்டிமல், திமுத் கருணாரத்னே, பெரேரா, மலிங்கா, லக்மல், தமிகா பிரசாத், குலசேகரா, இசுரு உதனா, ரந்திவ், அஜந்தா மெண்டிஸ், ஹெராத், மலிங்கா பண்டாரா, சசித்ரா செனனாயகே.

Share this Story:

Follow Webdunia tamil